Thursday, January 30, 2014

பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போ
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
# தன்னலமில்லாத , செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்

Source:  InterNet

Tuesday, January 14, 2014

பொங்கல்

நிலத்தினில் அடுப்பினை உருவாக்கி
நெருப்பினால் விறகை பற்றவைத்து
நீரினால் பானையை நிரப்பி
காற்றினால் கொழுந்து விட்டெறிந்து
பொங்கிவருகின்ற புது அரிசி
பானையை விட்டு விட்டு
ஆகாயம் நோக்கி வரும்பொழுது
பஞ்ச பூதங்களும் இந்நாளில்
நம்முடன் துணை புரிந்து
நாம் அனைவரும் ஆரவாரத்துடன்  
     பொங்கலோ பொங்கல்
என்றுரைக்கும் ஆனந்தம் உணர்த்துகிறது
தமிழன்னை  நம்மை விட்டு
விலகவில்லை என்பதனையும்
வணங்கும் முறை  மட்டுமில்லை
நானிலங்களில்  வாழும் மக்களில்
மருத நிலத்திற்க்கு மட்டுமே
மாக்களுக்கு மட்டுமல்லாமல்
விவசாயதத்திற்க்கு உதவிய அனைத்து
கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும்
ஒரு நன்னாளகத்தான் தமிழர்கள்
திருநாளாக இந்நாளை கொண்டாடுகிறோம்