Friday, October 29, 2021

கட (வ்)உள்

 எதுவுமே செய்ய இயலாத நேரத்தில்,


நீயே கதியென்று சரணாகதி அடையும் நேரத்தில்,


எங்கிருந்தோ ஒரு சக்தி நம்மைத் தாங்கிப் பிடிக்கும்......


அதனையே இறை சக்தியாய் உணர்ந்திருக்கிறேன்..

 

இறை என்பது கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி.....

Sunday, May 02, 2021

சேமிப்பு

"சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று சொல்வார்கள். சேமிப்பை நம் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்புப் பழக்கம்.

தேனீக்கள்!, தேனை சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழை நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும்,சிறுதுளி பெரு வெள்ளம் ஆவதும் சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்கள்...

ஒரு மனிதன் சேமிக்கபழகிக் கொள்ளும்போது சேமிப்பு எதிர்காலத்தில் பலவற்றுக்கு கரம் கொடுக்கும்...

வரவை மீறி கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு துன்பம்  மட்டுமல்ல பெரும்பாலும் இழப்பைத்தான் கொடுக்கும். இதை தடுக்க, தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்...

நம் குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும்... 

உங்கள் வருவாயைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்...

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;

For loan oft loses both itself and friend,

And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்...

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்து சம்பாதித்தது.அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்களே  முடிவு செய்ய வேண்டும்...

சேமிப்பு என்பது உங்களின் வருங்கால வாழ்க்கையை எந்தவித தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பண சிக்கலில் இருக்கும்போது யாரும் உங்களுக்கு உதவப்போவதில்லை...


_இதற்கு உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம், ஒரு பைசா கூட சேமிப்பு இல்லாமல் என்னை நாடி வந்தவர்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டேன்...இப்போது உணருகிறேன் சேமிப்பின் முக்கியத்தை-._

ஆம் .

நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்...!

என்னைப்போல் இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாயிருந்தால் நாளை பணம் உங்களை அசட்டைசெய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்...!!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம்தான் நமக்கு உதவி செய்யும். வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது...!!!

இது சுயநலமான உலகம். மற்றவர்கள்படும் துன்பத்தை  பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் உலகம். மீண்டும் மீண்டும் கூறுகிறேன். சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே நீங்கள் எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பதே உண்மை..

பொறுமை

 மனமானது குழப்பத்திலிருக்கும் போது, 

அதை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்...


சிறிது நேரம் சென்ற பின், 

அது தானே தெளிவடையும். 

அது வரை பொறுமையாக இருங்கள்...


மனதை அமைதிப்படுத்த, 

எந்த ஒரு செயலையும் கடினப்பட்டு செய்ய வேண்டியதில்லை... 


அது தானாகவே அமைதியடையும். 

பின்னர், 

எடுக்கும் முடிவே சரியாக இருக்கும்..!


பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்..!!