பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13-4-1930-ல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4-வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.
உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாணசுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை.
அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.
தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார்.
நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்ïனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்ïனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.
'நல்லதைச் சொன்னா நாத்திகனா?'- இதுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார்.
பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி.மு.க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.
சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எஸ்.துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 'நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்து விட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது' என்று டி.எஸ்.துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்து வந்தார். பின்னர் அவரது குட்டிக்கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். 'என் தங்கை', 'கவியின் கனவு' ஆகிய நாடகங்களில் நடித்தார்.
'கவியின் கனவு' நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்று நடித்து வந்த எம்.என்.நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது `ஏ.கே. சுந்தரம்' என்றே அழைக்கப்பட்டார்.
1954-ம் ஆண்டில் டி.கே.பாலசந்திரன் தயாரித்த 'கண்ணின் மணிகள்' என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் போலீஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, 'தேனாறு பாயுது. செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுது' என்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' சினிமாப் படத்திலும் இடம் பெற்றது.
பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாணசுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து 'குயில்' ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர்சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்து 'நீ முன்னேற வேண்டியவன். பொறுத்துக்கொண்டு இங்கேயே இரு' என்று சொல்லி விட்டு போனார்.
குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார். இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் 'பாரதிதாசன் துணை' என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும்போது 'வாழ்க பாரதிதாசன்' என்றும் எழுதி இருக்கிறார்.
1950-ம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அந்த காலகட்டத்திலேயே கல்யாணசுந்தரமும் நுழைந்தார். 1954-ல் கல்யாணசுந்தரம் 'படித்த பெண்' என்ற படத்துக்குத்தான் முதன் முதலாக 2 பாடல்கள் எழுதினார். ஆனால் அந்தப் படம் வெளிவர தாமதமானது.
இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் 'மகேஸ்வரி' என்பதாகும். இந்தப்படம் 13-11-1955-ல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20-4-1956-ல் 'படித்த பெண்' வெளிவந்தது. மகேஸ்வரி படத்தில் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்: 'அறம் காத்த தேவியே, குலம் காத்த தேவியே! - நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே!' என்பதாகும்.
1956-ம் ஆண்டில் வெளிவந்த 'பாசவலை', 'ரங்கோன் ராதா', 'மர்மவீரன்' போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 1958-ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெறத்தொடங்கின.
சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப்படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

No comments:
Post a Comment