இந்தியா என்பது ஒரு துணைக்கண்டம். பல இன மக்கள் வாழும், பல்வேறு தேசங்கள் இருந்த ஒரு நிலப்பரப்பு. 1700 நூற்றாண்டுகளில் வந்த ஐரோப்பியர்களில் ஆங்கிலேயர்கள் பெரும்பாலான அரசுகளை கைப்பற்றியதால், தங்களது ஆளுமை வசதிக்காக பல தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே இந்தியா என்னும் நாடு.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்த அனைத்து அரசர்களிடமும் அனுமதி பெற்றே ஐக்கிய இந்தியாவை உருவாக்கினர் அதற்கு விடுதலையும் வழங்கினர் ...
1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்று 1952 ஆம் ஆண்டிற்குள் இந்தியா குடியரசு நாடாக மாற்றம் பெற தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்க்கார், இந்தியாவின் அரசுகள் அதன் அனைத்து தேசிய இனத்தையும், சிறுபான்மையினரையும் காக்க வேண்டும் அவர்கள் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்றே வகுத்தார் ....
இந்திய துணைக்கண்டத்தின் இனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து 'இந்தியன்' என்ற புதிய ஒரு இனத்தை உருவாக்க நினைத்தது இந்திய அரசு ... இந்திய அரசின் அத்தகைய சூழ்ச்சியின் ஒரு வடிவம்தான் இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது ... அது மனித மாண்பிற்கு பொருந்தாத ஒன்று ... ஆதலால் தான் மொழி போராட்டம் வலுப்பெற்று தேசிய மொழிச் சட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னரே 1963 யில் ஆட்சி மொழி சட்டம் (இந்தி மற்றும் ஆங்கிலம்) நிறைவேற்றப்பட்டது, இல்லையேல் 1965 குடியரசு தினம் முதல் இந்தி மட்டுமே ஆட்சி அதிகார மொழியாக வளர இந்திய துணைக்கண்டத்தின் மற்ற மொழிகளும் இனங்களும் அழிந்திருக்கும்

No comments:
Post a Comment