Monday, November 26, 2012

நேரம் இருந்தால் படியுங்கள்


நேரம் இருந்தால்(முடிந்தால்) முழுவதையும் படியுங்கள்



எனது தாத்தாவிற்கு வயது சுமார் எழுபத்தைந்து அல்லது என்பது இருக்கலாம்.(கண்டிப்பாக என் தாத்தாவை மட்டும் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்)

படிக்க வசதி இல்லாத காரணத்தால் சிறு வயதில்

அவருடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார்  …

இதோ வருடங்கள் உருண்டு ஓடிவிட்டன…..

ஓடிய வருடங்களில் அவர் நம்முடைய நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார் தெரியுமா..????

தன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில்,  ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன்னுக்கும் மேலாக நெல் உற்பத்தி செய்திருக்கிறார்…

(ஒரு போகத்திற்கு தண்ணீரும்,  உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால்,  ஒரு போகத்திற்கு மேல் அவரால் விளைவிக்க முடியவில்லை..)

மேலும் இரண்டாம் போகமாய்  உளுந்து, எள், பயறு போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் 100 டன்னுக்கும் மேலாக விளைவித்திருப்பார்..

சுமார் 400 டன்கள் தாவர, மிருக கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரமாகவோ அல்லது வேறு உருப்படியான பொருளாக உபயோகித்திருக்கிறார்…

(அவரால் ஓசோன் படலத்தில் ஓட்டையோ ,  நீர், நிலம் மற்றும் காற்றோ மாசுபடவில்லை.)

வீட்டு வரி,  தண்ணி வரி,  வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு அவர் கட்டிய வரிகளில்,  பின்னர் வருகின்ற (சந்ததியினர்)எங்களுக்கு

ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்..

ஆனாலும் வரிகளை அவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையையும், ஓடுகளையும்  கூட நேரத்திற்கு அவரால் மாற்ற முடிந்ததில்லை…

அவரது தலையில் கட்டி இருக்கும் முண்டாசு முழுதாய் இருக்கும் பொழுது இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்…

அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்…

திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கும்…

அவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை…

அன்றாடம் உடல் உழைத்து உழைத்து வேலை செய்வதாலும்,

உடல் இறுகி கல் போன்று இருப்பதாலும்,

நோய் இவரை கண்டு அஞ்சியதுண்டு

எனது பாட்டியோ எத்தனை குழந்தை பெற்றாலும் சுக பிரசவம் மட்டுமே…..

(மருத்துவமனை பற்றி பேசவில்லை)………..

அந்த பாவி(தாத்தா)யை பற்றி பேசி ஏன் நம் நேரத்தை  வீணடிக்க வேண்டும்..??

நமக்கு வேறு வேலை இருக்கிறது.

ரஜினி,  விஜய்,  அஜித் மற்றும் சூர்யா படத்திற்க்கு பெரிரிரிரிய்ய்ய்ய மாலை அணிவித்து , பாலாபிஷேகம் செய்ய வேண்டும்.

மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.

நடிகைகளுக்கு கோயில் கட்ட வேண்டும்.

குத்து பாட்டுக்கு நடனம் ஆடும் சிறு குழந்தையை போற்றவேண்டும்.

கைது செய்யும் கட்சியை படம் பிடித்து காட்டி வன்முறையை தூண்ட வேண்டும்.

தீவிரவாதி என்று தெரிந்தும் அவனை எவ்வளவு செலவானாலும் பாதுகாக்க வேண்டும்.

கொலைவெறி பாடலுக்கு தேநீர் விருந்து தர வேண்டும்.

வெற்றி கோப்பையுடன்  வரும் மட்டை பந்து வீரர்களுக்கு தேநீர் விருந்தும், பணமும்,  பதவியும், பரிசுகளும் தர வேண்டும்.

பெண்கள் சூழ மத்தியில் வந்து கடன் வேண்டும் என்பவர்களுக்கு மந்திரி பதவி தர வேண்டும்.

இவர்களல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்கள்..???

Wednesday, November 21, 2012

காதலாகி கசிந்துருகி


காதலாகி கசிந்துருகி


நீண்ட நாள் ஆசைதான்

உன்னை பற்றி எழுதவேண்டும் என்று

நீ அப்படி ஒரு அழகி

வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை

கவிதைகளால் எனக்கு எழுதவும்  தெரியவில்லை

நினைத்து பார்க்கிறேன்

"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"
என்னும் வார்த்தையை

எனக்கென என்னில் நுழைந்தவளே

நீயே என் தேவதை

உன்னை பற்றி சொல்ல
என்னிடம்
வார்த்தைகள் இல்லை

என்னால் சொல்லக்கூட தெரியவில்லை

தேடிக்கொண்டிருக்கிறேன் வார்த்தைகளை

மீண்டும் சொல்கிறேன்....
நீ அப்படி ஒரு அழகி

உன்னை பற்றி ஒரு நாள் எழுதவேண்டும்

-------------------------

உன் கயல் விழிப்
பார்வையில் அடிமையானவன்

உன் கடைக்கண்
பார்வைக்கு  ஏங்குபவன்...

Monday, November 19, 2012

தஞ்சை கோயில்




வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை கண்டு வியப்போம்

படம் 1 : 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன,அதை சுற்றி இருப்பதை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில்,ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்

படம 2 : சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்

படம் 3 : சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள் ,பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதையே முழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!??அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் ??!!!

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், " உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார் , சற்று அமைதியாக செல்லுங்கள் ! ' என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள், .

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள், இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது
(இ-1) அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது (இ-2), வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது
(வ-1), கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது
(வ-2), நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.


இது ஒன்று தானா இல்லவே இல்லை, இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றது, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் உள்ளது இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா ?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது,அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது,அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் !!!!.காப்பாற்றுவோம் அழிவிலிருந்து நம் கலைப் பொக்கிஷங்களை.
with Sathesh Kumar.

Tuesday, November 13, 2012

தோல்வி நிலையென நினைத்தால்


1986 – ல் வந்த பாடல்…

எப்போது மனம் சிறிது சோர்வடைந்தாலும் இந்த பாடலை கேட்பேன். ஒரு கவிஞன் காலத்தை கடந்து வாழ்வான் என்பதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துகாட்டு  என்றே சொல்லலாம்….

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து…
தாயின் கனவை மிதிக்கலாமா…

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

விடியலுக்கு இல்லை தூரம் …
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா…

விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா…

யுத்தங்கள் தோன்றட்டும்
இரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

படம்: ஊமை விழிகள்
பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்

Sunday, November 11, 2012

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு


இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா .உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.

நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.

எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.

தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.

இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...

"எப்படியோ வர்ர ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது''

முக்கிய குறிப்பு:
அனைத்து நன்றியும் ஈரோடு கார்த்திகேயன்

Monday, November 05, 2012

குட்டிக்கதை





குட்டிக்கதை:

காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...
பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், 
எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)


அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.

நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.

இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி,தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. 

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டுபிடித்துவிட்டார்கள். 

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது.

நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது
Source : FB

Sunday, November 04, 2012

வேகமான சிந்தனை





வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்குவதற்கு இந்த கதை….

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர்.
 அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து காட்டில் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. 

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. 

புலி அருகில் வந்தவுடன் “ஆஹா…புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே” என்றது நாக்கைச் சுழற்றியபடியே 

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, ‘நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்’ என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது. 

இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது. 

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, “என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்” என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது. 

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து “இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன அந்த குரங்கை இன்னும் காணோமே!” என்றது சத்தமாக… 

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்…. 

Source – ‘ Quick Thinking on your feet’

நட்பு


என் இனிய நட்பே
 நிமிடத்திற்கு 60 முறைகள்
 என் இமைகள் துடித்தாலும்….
 ஆயிரம் முறை
 உன்னுடைய நினைவுகள்
 என்னுள் எழுகின்றன….

என்னால் என்
 நண்பர்களை
 மறக்க முடியவில்லை …
 காரணத்தினை தேடி
 அலைந்தபொழுதுதான்
 தெரிந்து கொண்டேன்
 என்னுடைய தேகத்தில்
 இரத்த நாளங்களைவிட
 நட்பு நாளங்களே
 அதிகம் என்று …….