அதிசிய காட்விட் பறவை பற்றிய தகவல் !!!
பறவையை கண்டே விமானம் உருவாக்கப்பட்டது.ஆன...ால் என்னதான் செயற்கை பொருட்களை வைத்து மனிதன் விமானத்தை உருவாக்கினாளும் பறவைகளை மிஞ்ச முடியாது என்பதை காட்விட் நிருபித்துள்ளது உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.
ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.
ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.
தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.
ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.
"மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று. 'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.
மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment