நீர்ப்பறவை..!
நீர்ப்பறவை..!
அன்று
“தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை” எம். ஜி.ஆர் பாடலில் இருந்து
“கடலில எழும்புற அலைகளை கேளடி ஓ மானே”
“கடலம்மா கடலம்மா உப்பு கடலம்மா ”
பாரதிராஜா கொடுத்த “கடலோர கவிதைகள்” ,
“இயற்கை”
என்று நிறைய படங்கள்
மீனவர்களின் வாழ்க்கை முறைகளையும் , அவர்களுடைய காதலையும்
சொல்லி இருக்கிறது .
இன்று
சீனு ராமசாமி கொடுத்த இந்த நீர்ப்பறவை. ‘’கடலோர காவியம்’’
இன்னும் நிறைய சொல்லனும் இந்த படத்தை பற்றி
படம் துவங்கிய முதல் ஷாட்டிலேயே
யார் ஒளிப்பதிவு என கேட்க தோன்றுகின்றது..!
கடலை படமாக்கிய விதத்தில் தியேட்டருக்குள் உப்புக்காற்று வீசுகின்றது…!
அன்று
(21 வருடத்திருக்கு முன்பு) மீன் பிடிக்க செல்லும் கதாநாயகன்
(இன்று)
தனது கணவன் வருவான் என்று 21 வருடமாக எதிர்பார்க்கும் கதாநாயகி
வீட்டை விற்றுவிட்டு வெளியூர் செல்லலாம் என்று அழைக்கும் தன் மகனிடம்
தனது கணவன் வருவான் என்று சொல்லிவிட்டு
தனது வீட்டில் “நீத்தாருக்கு” பாடும் பாடலை பாடும்போது மகனுக்கு சந்தேகம் வரவே,
அந்த இடத்தை தோண்டுகிறான்.
அங்கே எலும்புகூடு ஒன்று கிடைத்ததை பார்க்கிறான்.
அடுத்த சீன் போலீஸ் , ஜெயில் , கோர்ட்
கணவனை நான்தான் கொன்றேன் என்று கதாநாயகி வாக்குமூலம்
கொடுக்கும் போது கதை சூடுபிடிக்கிறது
அன்று
குடிகாரனாக திரியும் கதாநாயகன்
மனம் வருத்தமுற்று அவனை அடிக்கும் அப்பா,
அவனுக்கு ஆதரவாக அம்மா
நல்ல வழிக்கு பாதிரியார் துணையுடன் கொண்டு வரும் கதாநாயகி
நிறைய படங்களில் பார்த்து இருந்தாலும்
சற்றே வித்தியாசம் தான்
காதலி சொன்னதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் கதாநாயகனை
அவன் அகதி என்பதால் வேலைக்கு அழைக்க மறுக்கும் மீனவர்கள்
சமுத்திரகனி உதவியால் படகை சொந்தவிலைக்கு வாங்கி மீன் பிடிக்க செல்கிறான்
அப்புறம் என்ன
காதல் – திருமணம் – குழந்தை
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் கதாநாயகனை
அண்டைய நாடு சுட்டு வீழ்த்தவே, கதாநாயகன் இறந்து போக
அவனை அவனது குடும்பம்
அவனுடைய வீட்டிலேயே புதைக்கிறது.
இந்த படத்தில் யாரும் நடிக்க வில்லை எல்லாரும் வாழ்ந்துதான் இருக்கிறார்கள்.
சரண்யா
தாயார் என்றால் இவர்தான்
கடலில் இருந்து கணவர் அழைத்து வரும் சின்ன பையனை அவர் தாய் பாசத்துடன் பார்க்கும் முதல் பார்வையே போதும்
பிள்ளையிடம் பாசம் காட்டுவதில் தாய் தாய்தான் – பொங்கி வழிந்திருக்கிறார் .
வீட்டை சுத்தி சுத்தி வந்த பிள்ளை இங்கயே புதைத்துவிடுவோம் என்று அழும்போது
மனதில் நிற்கிறார்.
இன்னும் நிறைய சொல்லலாம்
சமுத்திரகனி
தனது இசுலாமிய கேரக்டருக்கு கச்சிதம்மாகவே வந்து இருக்கிறார்.
தூரத்தில் வருபவன் கஞ்சிக்கு வழி இல்லதவனா , எதிரியா என்று கேட்கும்போதும்
நாங்க நாலு பேர் சேர்ந்தா தீவிரவாதி என்றும் , சேரலைன்னா நீங்கதான் கேட்கணும் சொல்றது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கும் போதும்
தமிழக மீனவன் இறந்துவிட்டான் அன்று செய்தி வாசிப்பதை விட இந்திய மீனவன் என்று கூறினால் என்ன? என்று கேட்கும் போதும் கைதட்டல்கள்
நந்திதாதாஸ்
குண்டு துளைத்த உடலை போலீசிடம் கொடுத்தால் உடலை கூறு போட்டு விட்டு, அந்த உடலை வாங்க நாம் அலையை வேண்டி இருக்கும் அதனால்தான் புதைத்தோம் என்று சொல்லி அழும்போதும்
கோர்ட்டில்
எனது கணவனை நான்தான் மீன்பிடிக்க அனுப்பினேன்,
அவர்கள் கொன்று விட்டார்கள்
நான்தான் அவர் சாவிற்கு காரணம்,
நான்தான் அவரை கொன்று விட்டேன் என்று கதறும்போதும்,
பத்திரிக்கையாளர்கள்
“பின்னர் எதற்க்காக கணவர் வருவார் என்று கடலை எதிர்பார்த்து இருந்தீர்கள்” என்று கேட்கும் போது
“அவர் உடல்தான் வந்தது – உயிர் வரவில்லையே” காதல் ஏக்கத்தில் கூறும் போது
அரங்கத்தில் ஒரே விசில் சப்தம்தான்
பாடல்கள் எல்லாம் அருமை
-
சொல்ல வந்ததை இன்னும் அழுத்தி சொல்லி இருக்கலாம்
நீண்ட திரைக்கதை
No comments:
Post a Comment